ஓபிஎஸ்- ஈபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

ஓபிஎஸ்- ஈபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
ஓபிஎஸ்- ஈபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

வேட்பு மனுவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்கக் கோரி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது விதிகளுக்கு புறம்பானது என்றும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

(ஓபிஎஸ்-ஈபிஎஸ்-சுடன் கே.சி.பழனிச்சாமி)

ஆனால், இதை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கே.சி.பழனி சாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை அவசர வழக்காக, டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

’இடைக்காலத் தடை விதிக்க எந்த காரணமும் இல்லை’ என்று கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி யோகேஷ் கண்ணா, உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com