பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: தமிழகத்திற்கு எந்த இடம்?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: தமிழகத்திற்கு எந்த இடம்?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: தமிழகத்திற்கு எந்த இடம்?
Published on

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிக பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் குறைவான எண்ணிக்கையுடன் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. 

தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வின் படி, நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கையில் சராசரியாக 4,976 வன்கொடுமை சம்பவங்களுடன் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 1,870 சம்பவங்களுடன் தலைநகர் டெல்லி இரண்டாம் இடத்திலும், 1,706 சம்பவங்களுடன் சத்தீஸ்கர் மாநிலம் மூன்றாம் இடத்திலும், 78 சம்பவங்களுடன் அருணாச்சல பிரதேசம் நான்காம் இடத்திலும், சிக்கிம் மாநிலம் 40 சம்பவங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

அதேபோல், மாநிலங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி பார்க்கையில், தலைநகர் டெல்லி 19.1 சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது. 12.1 சதவீதத்தில் மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்திலும், 13.0 சதவீதத்தில் சத்தீஸ்கர் மூன்றாம் இடத்திலும், 12.9 சதவீதத்தில் சிக்கிம் மாநிலம் நான்காம் இடத்திலும், 12.4 சதவீதத்துடன் அருணாச்சல பிரதேசம் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

அதற்கு அடுத்ததாக, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக உள்ள மாநிலங்களில், 6 சம்பவங்களுடன் புதுச்சேரி முதலிடத்திலும், 24 சம்பவங்களுடன் நாகாலாந்து இரண்டாம் இடத்திலும், 342 சம்பவங்களுடன் தமிழகம் மூன்றாமிடத்திலும், 657 சம்பவங்களுடன் குஜராத் நான்காம் இடத்திலும், 888 சம்பவங்களுடன் பீகார் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

அதேபோல், மாநிலங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி, குறைவான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதில் புதுச்சேரி 0.8 சதவீதத்துடன் முதலிடத்திலும், தமிழகம் 1.0 சதவீதத்துடன் இரண்டாமிடத்திலும், 1.7 சதவீதத்துடன் பீகார் மூன்றாம் இடத்திலும், 2.1 சதவீதத்துடன் நாகாலாந்து நான்காம் இடத்திலும், 2.2 சதவீதத்துடன் குஜராத் ஐந்தாம் இடத்திலும் உள்ளதாக என்.சி.ஆர்.பி.யின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், மிகக் குறைவாக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெற்று, பட்டியலில் மோசமான இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலம் 40 வழக்குகளுடன் சற்று குறைவான பாலியல் சம்பவங்களை கொண்டிருந்தாலும், மக்கள் தொகை அடிப்படையில் சிக்கிம் சிறிய மாநிலம்; இருப்பினும் அங்கு அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com