சிக்கிம் தனிநாடா?: டெல்லி அரசின் பிழையும், கெஜ்ரிவாலின் கருத்தும்!!

சிக்கிம் தனிநாடா?: டெல்லி அரசின் பிழையும், கெஜ்ரிவாலின் கருத்தும்!!

சிக்கிம் தனிநாடா?: டெல்லி அரசின் பிழையும், கெஜ்ரிவாலின் கருத்தும்!!
Published on

சிக்கிம் குறித்து டெல்லி அரசு வெளியிட்ட ஒரு பத்திரிகை விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து டெல்லி முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசு பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் சிவில் பாதுகாப்பு படைக்கான தன்னார்வலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு இருந்தது. அந்த விளம்பரத்தில் இந்தியாவின் ஒரு பகுதியான சிக்கிம் மாநிலத்தை தனி நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது சிக்கிம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இது குறித்து கருத்து தெரிவித்த சிக்கிம் தலைமை செயலர், ''பெரிய நாட்டின் குடிமக்கள் என்பதில் பெருமை கொள்ளும் சிக்கிம் மக்களுக்கு இந்த விளம்பரம் வேதனையளிக்கிறது. இந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும். சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் வேறு ஒரு விளம்பரத்தை வெளியிட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், '' சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது போன்ற பிழைகளை சகித்துக் கொள்ள முடியாது. விளம்பரம் திரும்பப் பெறபட்டுள்ளது. பிழைக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com