அலுவலக கார்களின் தவறான பயன்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு புது நடவடிக்கை
டெல்லியில் எம்எல்ஏக்களின் காரில் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகளின் காரில் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அலுவலக வேலைக்குத்தான் தங்களது வாகனங்களை பயன்படுத்துகிறார்களா..? அல்லது மற்ற தேவைகளுக்காக அலுவலக வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறதா..? என்பது கண்காணிக்கப்பட உள்ளது.
இதன்மூலம் மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணடிக்கப்படாது என கருதும் டெல்லி அரசு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் எனவும் நம்புகிறது. டெல்லியில் அரசு அதிகாரிகள் அலுவலக வாகனங்களை சொந்த தேவைக்கே அதிகம் பயன்படுத்துவதாக தொடர்ச்சியான புகார்கள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த வண்ணம் இருந்த நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்த புது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.