இந்தியா
அரசுப் பேருந்தில் இலவசப் பயணம்: டெல்லி அரசு முடிவு
அரசுப் பேருந்தில் இலவசப் பயணம்: டெல்லி அரசு முடிவு
டெல்லியில் வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒற்றை மற்றும் இரட்டைப் பதிவெண்களில் முடியும் வாகனங்களை அடுத்தடுத்த நாட்களில் மட்டும் இயக்குவதற்கான கட்டுப்பாடு வரும், 13ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது. இதற்கிடையில் வாகன நிறுத்தக் கட்டணங்களும் டெல்லியில் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது