\
டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை

டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை

டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை
Published on

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கும் அனுமதியில்லை என்று அறிவித்துள்ள ஆணையம், பொதுமக்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திடுமாறு டெல்லி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்புக்கான இந்தக் கட்டுப்பாடுகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா எனத் தீவிரமாக கண்காணிக்குமாறு காவல்துறையை அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரத்தில் டெல்லியில் நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். தங்கள் தங்கள் இல்லத்தில் இருந்தே நிகழ்ச்சியை கண்டுகளித்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com