அடித்த அடியில் பறந்த சாமியாரின் ஒட்டுமுடி

அடித்த அடியில் பறந்த சாமியாரின் ஒட்டுமுடி

அடித்த அடியில் பறந்த சாமியாரின் ஒட்டுமுடி
Published on

டெல்லியில் நடந்த நாதுராம் கோட்சேயின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓம் என்ற சாமியார் வாங்கிய அடியில் அவரது ஒட்டுமுடி கையோடு வந்தது. அந்த காட்சிகள் அடங்கிய வீடியோ யூட்யூபில் வைரலாகி வருகிறது.

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் பிறந்தநாள் டெல்லியில் விகாஸ் நகர் பகுதியில் கொண்டாடப்பட்டது அதில் பங்கேற்க சர்ச்சை சாமியார் ஓம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையில் பேசச் சென்ற போது, திடீரென்று கூட்டத்தில் இருந்த சிலர், இந்த சர்ச்சை சாமியாரா நாதுராம் கோட்சேயின் பிறந்தநாள் விழாவின் சிறப்பு அழைப்பாளர்? என்று கேட்டு, அவரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அந்த தாக்குதலில் அவர் உண்மை முடி என்று கூறிக் கொண்டிருந்த அவரது நீலமாக கூந்தல் தனியாக கீழே விழுந்தது. அப்போது தான் அவரது கூந்தல் போலி என்று தெரிய வந்தது. சாமியார் அடி வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்ற வடிவேலின் காமெடி போல, அங்கு கூடியிருந்தவர்கள் இந்த களேபரத்திற்கு நடுவில் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். பின்னர் அவரது காரையும் தாக்கி சேதம் செய்துள்ளனர்.

இவரை தாக்கியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவர் ’பிக் பாஸ் 10’ என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர். இந்த மாத துவக்கத்தில் இவர் ஒரு அரை நிர்வாண பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ யூட்யூபில் பரவியது. அந்த வீடியோ வைரலாகி சுமார் 30 லட்சம் மக்களால் பார்க்கப்பட்டது. ஏற்கனவே இதுபோன்ற ஆபாச வீடியோ வெளியாகி சாமியாரின் பெயர் படுமோசமாக ரிப்பேராகி இருந்தது. இந்த நிலையில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com