பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் சொன்னேன்: ஒப்புக்கொண்ட சிறுமி
பக்கத்து வீட்டு இளைஞர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அத்தை அறிவுரையால் பொய் பேசியதாக டெல்லியை சேர்ந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் சுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 12. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். பல மதங்களாக அந்த இளைஞர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் கூறியிருந்தார். இதனையடுத்து பக்கத்து வீட்டு இளைஞரை போலீசார் கைது செய்து வழக்கும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த அந்த பெண், பக்கத்து வீட்டு இளைஞர் தன்னை பாலியல் வன்கொமை செய்யவில்லை என கூறியுள்ளார். அவர் மேலும் கூறும் போது," பக்கத்து வீட்டில் இருந்த இளைஞருக்கும், எனது அத்தைக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் என் அத்தையின் அறிவுறுத்தலின் பேரில் அந்த இளைஞர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தததாக பொய் புகார் கூறினேன்" என்றார். மேலும் சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும், அந்தப் பெண் எந்தவிதமான பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகவில்லை என்றே தெரியவந்துள்ளது. இதனயைடுத்து குற்றம்சாட்டப்ப அந்த நபரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.