விடாத யுத்தத்தில் விவசாயிகள்.. முட்டுக்கட்டை போடும் காவல்துறை.. ஸ்தம்பிக்கும் டெல்லி!

5 ஆவது நாளாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் டெல்லி விவசாயிகளின் போராட்டம்... மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என அமைதியான முறையில் தொடர்கிறது.
டெல்லி விவசாயிகள்
டெல்லி விவசாயிகள்புதிய தலைமுறை

குறைந்தபட்ச ஆதார விலைக்கான (MSP) சட்டம் உட்பட மொத்தம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 5 ஆவது நாளாக இன்று பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று விவாசாயிகளிடையே மத்திய அரசு 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அது கைகொடுக்காத நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

விவசாயி உயிரிழப்பு

போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், பஞ்சாப் - ஹரியானா எல்லைப் பகுதியில் உள்ள அம்பாலா அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 63 வயதான விவசாயி, மாரடைப்பு காரணமாக போராட்டக் களத்திலேயே நேற்று உயிரிழந்தார்.

தொடர்ந்து அங்கு தடுப்புகளை தாண்டி செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனை பட்டம் கொண்டு தடுத்த விவசாயிகள் மத்திய அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் என்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனிடையே சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு, பஞ்சாப் மாநிலத்தில் 3 மணி நேரம் சுங்கச் சாவடிகளை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் சாலை மறியல் காரணமாக அந்த மாநிலத்திலும் டெல்லியை இணைக்கும் சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்காக டெல்லி காவல்துறையினர் காசிப்பூர் எல்லையில் தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால் அக்ஷர்தம்-காசிப்பூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

பல்வேறு இடங்களில் ஆதரவு போராட்டம்

டெல்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி விவசாயிகள்
“அவர்கள் விவசாயிகள்; கிரிமினல்கள் அல்ல” - எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com