டெல்லி| பிரசாந்த் விஹாரில் தியேட்டர் அருகே பலத்த சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள் - போலீசார் விசாரணை!
டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள பிவிஆர் தியேட்டர் அருகே வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. போலிசார் என் ஐ ஏ மற்றும் தடயவியல் குழுக்கள் தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் இன்று காலை 11.48 மணியளவில் டெல்லி பிரசாந்த் விஹாரில் உள்ள தனியார் தியேட்டர் அருகே மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது. ஆனால், பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் திட்டமிட்ட குண்டுவெடிப்பா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மர்ம பொருள் வெடிப்புக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் இல்லை. இருப்பினும் ஒருவர் காயம் அடைந்துள்ளார். வெடி விபத்தை அடுத்து மாநகரில் போலிசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக பிரசாந்த் நகர் அருகே உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி அருகே வெடிவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழகம் உள்பட் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பள்ளிகள் மற்றும் விமானநிலையங்களில் வெடிகுண்டு மிரட்டலானது தொடர்ந்து வந்தபடி இருந்தது. அதை அடுத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் விமானநிலையங்கள் பலத்த சோதனை மேற்கொண்டதில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. இதனை அடுத்து இன்று தலைநகர் டெல்லியில் வெடிகுண்டு வெடிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.