டெல்லி சட்டமன்ற தேர்தல்
டெல்லி சட்டமன்ற தேர்தல்முகநூல்

பெரும்பான்மையை தாண்டி முன்னிலை... 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்குமா பாஜக?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளன.
Published on

தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தல் களத்தில் 603 ஆண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது.

தேர்தலில் மும்முனை போட்டியாக இருந்தாலும் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே கடுமையான போட்டியில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளன.

இந்த வகையில் இதை மெய்ப்பிக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது.

பெரும்பான்மையை தாண்டி முன்னிலை!

பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை தாண்டி சுமார் 46 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி வெறும் 23 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

70 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட டெல்லியில் 40 முதல் 45 இடங்களை கைப்பற்றி தலைநகரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் கருத்துக்கணிப்புகளை நிஜமாக்கும் வகையில் டெல்லியில் அமோக வெற்றியை நோக்கி பாஜக நகர்ந்து வருகிறது.

போட்டியிட்ட முக்கிய தொகுதிகள்

  • ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக சார்பில் மேற்கு டெல்லி முன்னாள் எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்பி சந்தீப் தீட்சித்தை களத்தில் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

  • கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி முதல்வர் அதிஷி, தெற்கு டெல்லி பாஜக முன்னாள் எம்பி ரமேஷ் பிதுரி மற்றும் காங்கிரஸின் அல்கா லம்பா ஆகியோரை எதிர்த்து களம் கண்டுள்ளார்.

  • முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பட்பர்கஞ்சிலிருந்து ஜங்புராவுக்கு மாறி, பாஜகவின் தர்விந்தர் சிங் மர்வா மற்றும் காங்கிரஸின் ஃபர்ஹாத் சூரி ஆகியோரை எதிர்த்து களம் கண்டுள்ளார்.

  • இதைத் தவிர கிரேட்டர் கைலாஷ், மால்வியா நகர், காந்தி நகர், மங்கோல்புரி மற்றும் மத்தியா மஹால் ஆகியவை பிற முக்கிய தொகுதிகளா பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை பின்தங்கி இருந்த நிலையில், தற்போது சிசோடியா முன்னிலை பெற்றிருக்கிறார். ஆனால், கடந்த மூன்று டெல்லி சட்டசபை தேர்தல்களில் இல்லாத அளவு AAP குறிப்பாக டெல்லி முதல்வர் அதிஷி, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com