“ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” - அனுமதி வழங்கி வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்!

சீல் வைக்கப்பட்டுள்ள வீட்டை ஜாபர் சாதிக் குடும்பத்தினர் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தது.
ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்ட்விட்டர்

மேற்கு டெல்லி கைலாஷ் பாா்க் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில், சமீபத்தில் சோதனை நடைபெற்றது. இதில் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 50 கிலோ சூடோபெட்ரினை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக அங்கிருந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில், அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோபெட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

ஜாபர் சாதிக்
சென்னை அழைத்துவரப்பட்டார் ஜாபர் சாதிக்... 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை!

இதனிடையே சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபா் சாதிக் வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு வீட்டிற்கும் சீல் வைத்தனர்.

இந்த நிலையில் வீட்டிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, இன்று (ஏப்ரல் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, ”ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்” என மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, ”சீல் வைத்த வீட்டைப் பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டுள்ள வீட்டை ஜாபர் சாதிக் குடும்பத்தினர் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தது.

இதையும் படிக்க: பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு: பாஜக நிர்வாகிக்கு தொடர்பா?.. என்.ஐ.ஏ. தீவிர விசாரணை!

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் குடோனில் NCB அதிகாரிகள் சோதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com