காரை பார்க் செய்வதற்குள் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் - சிசிடிவி காட்சி
டெல்லியில் துப்பாக்கி முனையில் ஒரு குடும்பத்தினரை மிரட்டி வழிப்பறி செய்துசென்ற மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டெல்லியின் வடமேற்கில் உள்ள மாடல் டவுனில் வருண் பால் என்பவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் வீட்டிற்கு வந்துள்ளார். காரை வீட்டுக்கு வெளியே பார்க் செய்துவிட்டு வாசல் கேட்டை மூடுவதற்காக வருண் சென்றுள்ளார். அப்போது அவரை துப்பாக்கி முனையில் மடக்கிய மூன்று கொள்ளையர்கள் அவரிடம் இருந்த ரூ.19 ஆயிரம் பணத்தையும் அவர் கையில் மாட்டியிருந்த தங்க செயினையும் பறித்துச் சென்றனர்.
காருக்குள் அமர்ந்து இருந்த வருணின் மனைவி கொள்ளையர்களை கண்டதும் போலீசாருக்கு தகவல் கொடுக்க முயன்றார். ஆனால் கொள்ளையனில் ஒருவர் அவரை மிரட்டி செல்போனையும் பிடுங்கிச் சென்றார்.
இது குறித்து தகவல் அளித்த போலீசார் விஜயாந்தா ஆர்யா, ''சந்தேகத்துக்கு இடமான முறையில் அவ்வழியாக சென்ற 3 பேரை மடக்கி விசாரிக்க நினைத்தோம். ஆனால் அவர்கள் துப்பாக்கி மூலம் சுடத் தொடங்கினர். போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் கொள்ளையர்கள் தப்பித்துவிட்டனர் பின்னர் வருண் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகிறோம்'' என தெரிவித்துள்ளார்