கெஜ்ரிவாலின் திருடு போன கார் இன்னும் சிக்கவில்லை

கெஜ்ரிவாலின் திருடு போன கார் இன்னும் சிக்கவில்லை
கெஜ்ரிவாலின் திருடு போன கார் இன்னும் சிக்கவில்லை

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் காரை திருடியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

டெல்லி தலைமை செயலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கெஜ்ரிவாலின் நீல நிற மாருதி வேகன்-ஆர் கார் நேற்று திருடப்பட்டது. இந்நிலையில் காணாமல் போன கெஜ்ரிவாலின் கார் இன்னும் கிடைக்கவில்லை. 24 மணி நேரம் ஆன பின்னரும் கெஜ்ரிவாலின் வேகன்-ஆர் காரை கண்டுபிடிக்க முடியாமல் டெல்லி போலீசார் திணறி வருகின்றனர். கெஜ்ரிவாலின் கார் திருடு போன காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த போதிலும், திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார்‌ இதுவரை கண்டுபிடிக்கவில்லை. டெல்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com