ஸ்வாதி மலிவால் புகார் : கைது செய்யப்பட்ட பிபவ் குமார்! 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!

ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மலிவால் அளித்த புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமாரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிபவ் குமார் கைது
பிபவ் குமார் கைதுமுகநூல்

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினராக ஸ்வாதி மலிவால் டெல்லி காவல்துறையில் பதிவு செய்த புகாரில் பிபவ் குமார் தம்மை கெஜ்ரிவாலின் இல்லத்தில் கடந்த 13ஆம் தேதி தாக்கியதாக குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக பிபவ் குமாரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து பிபவ் குமார் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் நேற்றிரவு பிபவ் குமார் டெல்லி மெட்ரோபோலிடன் மேஜிஸ்த்ரேட் கவுரவ் கோயல் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பிபவ் குமார் கைது
“நாளை பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை செய்யப்படும்”- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

இது தொடர்பாக இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, பிபவ் குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com