கெஜ்ரிவாலின் பிரபலமான நீல நிற கார் திருட்டு போனது..!

கெஜ்ரிவாலின் பிரபலமான நீல நிற கார் திருட்டு போனது..!
கெஜ்ரிவாலின் பிரபலமான நீல நிற கார் திருட்டு போனது..!

டெல்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரபலமான கார் திருட்டு போனது.

அரவிந்த் கெஜ்ரிவால் நீல நிற வேகன் ஆர் காரில் அடிக்கடி பயணிப்பது வழக்கம். கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கெஜ்ரிவால் இந்த காரில் சென்று தான் பிரச்சாரம் மேற்கொண்டார். டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் கூட அரசின் காரில் செல்ல மறுத்து இந்த காரைத்தான் பயன்படுத்தி வந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அந்த காரினை பயன்படுத்தவில்லை. ஆம் ஆத்மிகட்சியின் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் வந்தனா சிங் தற்போது அந்த காரைப் பயன்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் டெல்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘DL 9CG 976’ என்ற பதிவெண் கொண்ட அந்த கார் திருடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், “டெல்லி தலைமைச் செயலகத்தின் வெளியே கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதியம் ஒரு மணியளவில் கார் காணாமல் போயுள்ளது” என்றார். கெஜ்ரிவால் காரோடு சேர்த்து டெல்லியில் இந்த ஆண்டு மட்டும் 30,499 கார்கள் திருட்டு போகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com