"ஜூன் 4ம் தேதி அனுமனுக்கு உகந்த நாள்; நிச்சயம் நல்லசெய்தி வரும்" - சிறைக்கு திரும்பினார் கெஜ்ரிவால்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை நிறைவடைந்த நிலையில், மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார். முன்னதாக காந்தி நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்pt web

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரப்புரை செய்வதற்காக உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியிருந்தது. கடந்த மே 10 ஆம் தேதி சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டார். அவரது பிணை நிறைவடைந்த சூழலில், பிணை நீட்டிப்பு கோரி அவர் தாக்கல் செய்த மனு மீது வரும் 5 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து முன்னரே அறிவித்தது போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு திரும்பியுள்ளார்.

முன்னதாக காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கெஜ்ரிவால், கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கட்சி அலுவலகம் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
”மக்களின் வளர்ச்சிக்கு பாஜக உழைக்கும்” - அருணாச்சல பிரதேச வெற்றி குறித்து பிரதமர் மோடி!

இதனை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான குற்றங்களில் உண்மைத் தன்மை இல்லை என கூறினார். ஜூன் 4 ஆம் தேதி அனுமனுக்கு உகந்த நாள் என கூறிய அவர், அன்றைய தினம் நல்ல செய்தி வரும் என்றும் குறிப்பிட்டார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் போலியானவை என்றும், கணிப்புகளை இந்தியா கூட்டணி பொய்யாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பரப்புரைக்காக பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கு நன்றி என்றும், ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கவில்லை என்றும் கூறிய கெஜ்ரிவால், சிறையில் இருந்தவாறு டெல்லி மக்களை பார்த்துக் கொள்வேன் என்று உருக்கமாக கூறினார்.

சிறையில் இருந்தவாறு முதலமைச்சர் பணிகளை அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொள்வார் என்று தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, சுனிதா கெஜ்ரிவால், அர்விந்த கெஜ்ரிவால் கூறும் தகவல்களை கட்சியினருக்கு தெரியப்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.

தேர்தல் பரப்புரைக்காக வெளிவந்த கெஜ்ரிவால், மீண்டும் சிறை சென்றுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியாகின்றன. அதற்கு அடுத்த நாள் கெஜ்ரிவாலுக்கு பிணை குறித்து முடிவை அறிவிக்கிறது நீதிமன்றம்...

அரவிந்த் கெஜ்ரிவால்
விவாதத்தை கிளப்பிய கருத்துக்கணிப்பு முடிவுகள்; 2014, 2019 தேர்தல்களில் கணிப்புகள் சரியாக அமைந்ததா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com