ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது. சிபிஐ காவல் முடிவடையும் நிலையில் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டாம் என சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ப.சிதம்பரத்தை வரும் 19ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றமான டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், போதிய பாதுகாப்புடன் தனிச்சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.