\
அமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்

அமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்

அமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்
Published on

அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்தது. இதனால் தான் அமலாக்கத்துறையிடம் சரணடைய விரும்புவதாக ப.சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்து நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com