கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - டெல்லி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - டெல்லி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - டெல்லி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

தலைநகர் டெல்லியில் இன்று பட்ஜெட் தாக்கல் ஆனநிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து காணலாம்.

டெல்லிக்கான நிதிநிலை அறிக்கையை, அம்மாநில துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியா இன்று தாக்கல் செய்தார். அப்போது டெல்லிக்கு என்று புதிய எலக்ட்ரானிக் நகரம் உருவாக்கப்படும் என்றும், ஸ்டார்ட் தப்புக்களுக்கான புதிய கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16,278 கோடி ரூபாய் கல்வித்துறைக்கு என்றும், 1300 கோடி ரூபாய் அங்கீகாரமில்லாத காலணிகளுக்கு தெரு வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு என்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுமார் 6 ஆயிரத்து 154 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் புதிய திரைப்பட கொள்கை உருவாக்கப்பட்டு, வருடம்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும் என்றும், அதேபோல ஷாப்பிங் செய்வதற்கென்று, தனி திருவிழா நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இணையதளங்களுக்கான செயலிகள் உருவாக்குவது உள்ளிட்ட நவீன வேலைகளுக்காக, வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் டெல்லி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சந்தைக்கு என்று தனியாக இணையதளம் உருவாக்கி, அதில் சுமார் 10 லட்சம் வியாபாரிகள் பலன் அடையும் வகையில், சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வருடத்தில் யமுனை நதியை முழுமையாக தூய்மைப்படுத்துவது, டெல்லியில் தற்போது இயக்கப்பட்டு வரும் மாநில மருத்துவமனைகளை தரம் உயர்த்த சுமார் ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், முகங்கள் எனப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த 475 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக சுகாதாரத் துறைக்கு இன்று 9 ஆயிரத்து 669 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு சுமார் 75,800 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி அரசின் இந்த பட்ஜெட், பொருளாதாரத்தை மேலும் வேகம் எடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியிலிருந்து நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com