ராமாயண நாடகத்தில் சினிமா பாடலை பாடியதால் சர்ச்சை: மாணவர்களுக்கு இந்து அமைப்புகள் கண்டனம்

ராமாயண நாடகத்தில் சினிமா பாடலை பாடியதால் சர்ச்சை: மாணவர்களுக்கு இந்து அமைப்புகள் கண்டனம்
ராமாயண நாடகத்தில் சினிமா பாடலை பாடியதால் சர்ச்சை: மாணவர்களுக்கு இந்து அமைப்புகள் கண்டனம்
ராமாயணத்தை இழிவுபடுத்தி விட்டதாக டெல்லி எய்ம்ஸ் மாணவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இந்துக்களின் இதிகாசமான ராமாயணத்தை நாடகமாக நடித்தபோது அதனை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக லட்சுமணன் கதாபாத்திரத்தில் நடித்தவரை பார்த்து சூர்ப்பணகை சினிமா பாடலை பாடுவதுபோன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஷஷாங்க் சேகர் ஷா என்ற வழக்கறிஞர், டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம், மாணவர்கள் அமைப்பு மற்றும் நாடகத்திற்கு உதவிய கல்வி தொடர்பான செயலி நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிராக புகார் மனு அளித்துள்ளார். ராமாயணத்தை நவீன முறையில் மாணவர்கள் சிலர் நடத்த முயன்றதாகவும் அதில் ஏற்பட்ட வருந்தத்தக்க செயல்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் டெல்லி எய்ம்ஸ் மாணவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com