தலைகீழாக நின்றும், தரையில் உருண்டும் விவசாயிகள் போராட்டம்
தேசிய வங்கிகளில் பெற்ற விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 23 வது நாளாக தொடர்கிறது.
கடன் தள்ளுபடி, கூடுதல் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளில் விவசாயிகள் உறுதியாக இருக்கிற வேளையில், அதனை மத்திய அரசு ஏற்க மறுப்பதால் போராட்டம் தொடர்ந்துகொண்டே செல்கிறது.
வாழ்வாதாரத்திற்காக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க நாள்தோறும் நூதன முறையில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். விவசாயிகளின் நிலையை மத்திய அரசு தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது என்று கூறி, தலைகீழாக போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து, தற்போது தமிழக விவசாயிகள் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடைபெற்றுவரும் வேளையில், நேற்று கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளின் கடனை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.