பெண்கடவுளை விமர்சித்து எதிர்ப்பில் சிக்கிய பேராசிரியர்

பெண்கடவுளை விமர்சித்து எதிர்ப்பில் சிக்கிய பேராசிரியர்

பெண்கடவுளை விமர்சித்து எதிர்ப்பில் சிக்கிய பேராசிரியர்
Published on

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பேஸ்புக்கில் பெண் கடவுள் துர்க்கையை விமர்சித்து பதிவிட்டதால் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளாகியுள்ளார்.
 
டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கேதர் குமார். இவர் ஒரு நாத்திகர். இந்நிலையில் பேஸ்புக்கில் இவர் வெளியிட்ட பதிவு ஒன்றில், பெண் கடவுளான துர்க்கை அம்மனை அவமதிக்கும் வகையில் விமர்சித்துள்ளார். இந்தப் பதிவினைக் கண்ட இந்து மத ஆதரவாளர்கள் உடனடியாக கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர். இதனால் சிறிது நேரத்திலேயே கேதர் தனது பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் ஏ.பி.வி.பி மாண அமைப்புகள் இதற்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பேராசிரியரை பதவிநீக்கம் மற்றும் கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com