கடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ் 

கடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ் 

கடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ் 
Published on

கடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் டெல்லி காவல்துறை கண்டுபிடித்த சம்பவம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

டெல்லியிலுள்ள மோகன் கார்டன் பகுதியில் சிம்லாவை சேர்ந்த ரிஜ்வால் என்பவர் கடத்தப்பட்டார். இவர் கடத்தப்பட்டது தொடர்பாக அவரது சகோதரர் டெல்லி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மிகவும் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு ரிஜ்வாலை கண்டுபிடித்தனர். அத்துடன் ரிஜ்வாலை கடத்தியவர்களில் ஒருவரை கைதும் செய்துள்ளனர். 

இது தொடர்பாக டெல்லி காவல்துறை தரப்பில்,“ரிஜ்வால் கடத்தப்பட்ட உடன் அவரது சகோதரர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதில் ரிஜ்வாலை கடத்தி சென்ற காரில் ‘ஹை லேண்டர்’ என்ற வாசகம் இருந்தது என்ற தகவலையும் அளித்தார். இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்த காவலர் விரைவாக அந்த வாசகம் உடைய காரை தேட ஆரம்பத்தார். 

இந்த கார் உத்தம் நகர் பகுதியிலுள்ள டிராஃபிக் சிக்னலில் நின்று கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் கடத்தியவர்களில் இருவர் தப்பிச் சென்றனர். ரிஜ்வாலை நாங்கள் மீட்டுள்ளோம். அத்துடன் ரிஜ்வாலின் காரையும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட 1,650 ரூபாய் பணத்தையும் நாங்கள் மீட்டுள்ளோம். கடத்திய நபர்களில் ஒருவனை கைது செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் ரவி என்பதும் அவர் உத்தம் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com