ஹைதராபாத்: ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
ஹைதராபாத் அருகே கல்லூரி மாணவி ஒருவரை, 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மெச்சால் காடிகேசர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மெடிக்கல் ஸ்டோர் ஒன்றில் பகுதிநேர வேலை செய்து வந்த மாணவி ஆட்டோவில் சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமையின்போது மாணவியை அடித்து துன்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கு தொடர்பான போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்