\
புதிய ‘ரஃபேல்’ விமானத்திற்கு ஆயுத பூஜை  -  பிரான்ஸ் புறப்படும் ராஜ்நாத் சிங்

புதிய ‘ரஃபேல்’ விமானத்திற்கு ஆயுத பூஜை - பிரான்ஸ் புறப்படும் ராஜ்நாத் சிங்

புதிய ‘ரஃபேல்’ விமானத்திற்கு ஆயுத பூஜை - பிரான்ஸ் புறப்படும் ராஜ்நாத் சிங்
Published on

முதல் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக் கொள்வதற்காக நாளை மறுநாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா - பிரான்ஸ் இடையே அதிநவீன ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தை வழங்க பிரான்ஸ் முன்வந்தது. ராணுவ பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் போர் விமானத்தை பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் செல்லவுள்ளார். 

வரும் 8ஆம் தேதியன்று முறையாக ஆயுத பூஜை நடத்தி ரஃபேல் போர் விமானத்தை அவர் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com