''சீன எல்லையில் இந்திய படைகள் குறைக்கப்படாது'' - நிர்மலா சீதாராமன்

''சீன எல்லையில் இந்திய படைகள் குறைக்கப்படாது'' - நிர்மலா சீதாராமன்

''சீன எல்லையில் இந்திய படைகள் குறைக்கப்படாது'' - நிர்மலா சீதாராமன்
Published on

சீனாவுடனான எல்லைக்கோட்டு பகுதியில் இந்திய படைகள் குறைக்கப்பட மாட்டாது எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

சீன எல்லை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இருநாட்டு எல்லையில் சீன ராணுவம் அமைதி காக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தை ஒருபுறம் இருப்பினும்,‌ எல்லைப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய ராணுவ வீர‌ர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். 

எக்காரணம் கொண்டும் சீன எல்லையில் படைகளை குறைக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். டோக்லாம் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் வகையில் இருநாடுகள் உடனான பேச்சுவார்த்தையை அடிக்கடி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com