அபிநந்தனுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

அபிநந்தனுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

அபிநந்தனுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
Published on

டெல்லியில் விமானப்படை வீரர் அபிநந்தனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

பாகிஸ்தானில் இருந்து நேற்று தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது. இதனிடையே ராணுவ தளபதி பி.எஸ் தனோவாவிடம் பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பது குறித்து அபிநந்தன் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், டெல்லியில் விமானப்படை வீரர் அபிநந்தனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது விங் கமாண்டர் அபிந்தனிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற விவகாரங்கள் குறித்தும் அபிநந்தன் எடுத்துரைத்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக நடைப்பெற்றது என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது பாதுகாப்புத்துறைக்கான உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் விமானப்படையை சேர்ந்த உயரதிகாரிகள் இருந்ததாக தெரிகிறது. இதில் குறிப்பாக பாகிஸ்தானில் அபிநந்தன் எத்தகைய இன்னல்கள், மற்றும் சவால்களை சந்திக்க முடிந்தது என்பது குறித்து பேச்சுவார்த்தையில் பேசப்பட்டதாக தெரிகிறது. 

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் இன்று நேரடியாக சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com