
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜூரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் இன்று அங்கு செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஞ்சி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள், ரஜூரி மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் அப்பகுதியில் தீவிர சோதனையில் அவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது தீவிரவாதிகள், தாங்கள் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை இயக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், நான்கு ராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மேலும் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து தாக்குதல் நடந்த ரஜூரி மாவட்டத்தில் முழுமையாக இணையதளம் துண்டிக்கப்பட்டு தேடுதல் வேட்டையானது முடுக்கி விடப்பட்டது. ராணுவத்தினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, அதற்கான தோட்டாக்கள், கையடி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ரஜூரி மாவட்டத்திற்கு நேரில் செல்கிறார். இதற்காக அவர் ஜம்முவை அடைந்துள்ளார்.