சீன உளவு கப்பலுக்கு ரணில் பச்சைக்கொடி.. ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தின் முக்கியத்துவம் இதுதானா?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் முதல் வாரத்தில் இலங்கை பயணம் செய்ய உள்ளார்.
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்புதிய தலைமுறை

இந்திய - இலங்கை உறவுகள் மேலும் வலுப்படும் என சமீபத்தில் டெல்லி பயணம் செய்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதி உதவி, எரிபொருள் விநியோகம், உணவுப் பொருட்கள் விநியோகம், மற்றும் பாதுகாப்புத் துறைக்கான விமானங்களை வழங்கியது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கடும் சிக்கல்களை சந்தித்து வரும் இலங்கை சகஜ நிலைக்கு திரும்ப இந்திய அரசு உதவி செய்து வருகிறது.

இத்தகைய சூழலில் ராஜ்நாத் சிங் இலங்கை சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சரின் பயணம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் சவுத்ரி இலங்கை சென்றது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் இலங்கை விமானப்படைக்கு AN-32 போக்குவரத்து விமானம் ஒன்றை அளித்தார். ஏற்கெனவே இந்தியா இலங்கைக்கு டார்னியர் ரக கண்காணிப்பு விமானங்களை கடல் பரப்பை கண்காணிக்கும் பணிக்காக அளித்துள்ளது.

சீன ஆதிக்கத்துக்குப் பணிந்து இலங்கை எந்தவிதத்திலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் இடம் கொடுக்கக்கூடாது என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து வந்தாலும், சீன உளவு கப்பல்கள் இலங்கை துறைமுகங்களில் நங்கூரம் பாய்ச்ச அனுமதி அளிக்கப்படுவது தொடர்ந்து இந்தியாவுக்கு கவலை அளித்து வருகிறது.

இத்தகைய சூழலில் ராஜ்நாத் சிங் பயணம் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்குமா என எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com