\
”ரஃபேல் குறித்து விமர்சிப்பவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலானவர்கள்” ராஜ்நாத் சிங்

”ரஃபேல் குறித்து விமர்சிப்பவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலானவர்கள்” ராஜ்நாத் சிங்

”ரஃபேல் குறித்து விமர்சிப்பவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலானவர்கள்” ராஜ்நாத் சிங்
Published on

பிரான்சிலிருந்து இந்தியா வாங்கியுள்ள 36 ரஃபேல் விமானங்களில் முதல்கட்டமாக 5 விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.

அது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது..

“ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான். அது இந்திய விமானப்படையின் இந்த புதிய சக்தியை (ரஃபேல் விமானம்) குறித்து யாராவது கவலைக் கொண்டாலோ அல்லது அதனை விமர்சிக்க வேண்டும் என்று விரும்பினாலோ அவர்கள் நமது பிராந்தியத்தின் அமைதியை குலைக்க விரும்புவோராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

 5 ரஃபேல் போர் விமானங்களை லடாக்கில் சீன எல்லையை ஒட்டி நிறுத்த திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com