\
 ‘தேஜஸ்’  போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

 ‘தேஜஸ்’  போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

 ‘தேஜஸ்’  போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!
Published on

தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார். 

கர்நாடாகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு விமானத்தின் அருகே சென்றார். அங்கு விமானத்தின் மீது ஏறி சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்தார். 

பின்னர் தேஜஸ் போர் விமானத்தில் அவரும் விமான படை தளபதி என்.திவாரியும் பறந்து சென்றனர்.

இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com