திருமண முரண்பாடு... பணப்பிரச்னை... 2010-19-க்குள் 1,112 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை..!

திருமண முரண்பாடு... பணப்பிரச்னை... 2010-19-க்குள் 1,112 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை..!
திருமண முரண்பாடு... பணப்பிரச்னை... 2010-19-க்குள் 1,112 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை..!

2010-2019-க்குள் முப்படைகளைச் சேர்ந்த 1,112 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்காக முப்படைகளிலும் 14 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பல காரணங்களால் வீரர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அப்படி 2010-2019-க்குள் முப்படைகளைச் சேர்ந்த 1110 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 12 லட்சம் வீரர்களை கொண்டுள்ள ராணுவத்தில் 895 வீரர்களும், கப்பற்படையில் 32 பேரும், விமானப்படையில் 185 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், வீரர்களின் தற்கொலையை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. யோகா, மனநல ஆலோசனைகள் வழங்குதல், தரமான உணவுகள், குடும்பத்தினருடன் தங்கும் வசதி, சரியான விடுமுறை என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவையெல்லாம் வீரர்களின் மன உளைச்சலை குறைத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக குடும்ப பிரச்னைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு வீரர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள உயர் அதிகாரி ஒருவர், ''முன்பெல்லாம் வீரர்கள் எப்போதாவதுதான் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பார்கள். ஆனால் தற்போது செல்போன் இருப்பதால் 24 மணி நேரமும் குடும்பத்தினரும் இணைந்திருக்கிறார்கள். இதனால் சின்ன சின்ன பிரச்னைகளும் அவர்களுக்கு உடனுக்கு உடனே தெரிந்துவிடுகிறது. ஆனால் குடும்பத்தின் அருகில் இல்லாததால் மன உளைச்சல் ஏற்பட்டு வீரர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்'' என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சொந்த பிரச்னைகள், திருமண முரண்பாடு, உடல்நிலை மற்றும் பணப்பிரச்னையே அதிக வீரர்களின் மன உளைச்சலுக்கு காரணமாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com