இந்தியா
சாலையில் சண்டையிட்டுக் கொள்ளும் மான்கள்! வைரலாகும் வீடியோ
சாலையில் சண்டையிட்டுக் கொள்ளும் மான்கள்! வைரலாகும் வீடியோ
இரண்டு மான்கள் சாலையில் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மான்கள் என்றாலே பேரழகுதான். மான்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அதனாலேயே, மான்களின் அழகோடு பெண்களை ஒப்பிட்டு கவிதைகள் படைக்கிறார்கள் கவிஞர்கள். பொதுவாக, மான்களை சிங்கம் புலி போன்ற விலங்குகள் துரத்துவதைத்தான் நாம் அதிகம் பார்த்திருப்போம்.
ஆனால், இரண்டு மான்கள் துரத்தி துரத்தி சண்டைப் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஆச்சர்யத்துடன் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் சாலையில் இரண்டு மான்கள் ஆக்ரோஷமாக முன்னங்கால்களைத் தூக்கி அடித்துக்கொள்கின்றன.
ஆச்சர்யத்துடன் பார்த்து மான்களுக்குள் கணவன் மனைவி சண்டையாக இருக்குமோ என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.