‘கஃபே காபி டே’ உரிமையாளர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு 

‘கஃபே காபி டே’ உரிமையாளர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு 

‘கஃபே காபி டே’ உரிமையாளர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு 
Published on

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். காபி டே-யின் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளன. இந்நிலையில் அவர்  மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து அவர் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. 

இந்நிலையில் நீண்ட தேடுதலுக்குப் பின் நேத்ராவதி ஆற்றில் சித்தார்த்தாவின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com