Headlines
Headlinesfacebook

Headlines|HMPV தொற்று பாதிப்பு முதல் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த கனடா பிரதமர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, HMPV தொற்று பாதிப்பு முதல் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த கனடா பிரதமர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் HMPV தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது.

  • நீண்ட ஆண்டுகளாகவே HMP வைரஸ் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் முகக்கவசம் அணியவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

  • கர்நாடகாவில் இருவருக்கும் குஜராத்தில் ஒருவருக்கும் HMP வைரஸ் தொற்று உறுதியானது. பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் வழிகாட்டு விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தல்.

  • தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஆளுநர் அவமதித்ததாக கூறி மாவட்டந்தோறும் திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம். மேலும், சட்டப்பேரவையில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டார் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கண்டனம்.

  • தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநருக்கு மரியாதை உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கம். ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் ஆளுநர் உரையின்போது தேசிய கீதம் இசைக்கப்படுவதாகவும் அறிக்கை.

  • சட்டப்பேரவை நடவடிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசர காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் மாளிகை விமர்சனம். மாநில அரசால் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.

  • யார் அந்த சார் என்ற பதாகைகளை ஏந்தி இபிஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கம். சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்.

  • அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. வழக்கு குறித்த தங்கள் உத்தரவை நிறைவேற்ற தமிழக காவல்துறைக்கு நேரமில்லையா எனக் கேள்வி.

  • அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க தமிழகமெங்குமிருந்து இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு.இந்தவகையில், இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம்.

  • இந்தியாவில் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி. மேலும், சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 8 வீரர்களின் தியாகம் வீண் போகாது எனக்கூறி இரங்கல்.

Headlines
அமைதியாக ஓய்வெடுங்கள் மன்மோகன்..!
  • அசாமின் அசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி இருப்பதால் அச்சம். மேலும், சுரங்கத்திற்குள் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்.

  • பட்ஜெட்டில் பெரும் கோடீஸ்வரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அதிக வரி விதிக்க தொழிற் சங்கங்கள் வலியுறுத்தல். பல்வேறு துறையினருடன் மத்திய நிதியமைச்சர் கடந்த ஒரு மாதமாக நடத்தி வந்த ஆலோசனைக்கூட்டங்கள் நிறைவு.

  • கனடா நாட்டு பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு. உள்கட்சி எதிர்ப்பு, கூட்டணி கட்சிகளுடனான பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ராஜினாமா முடிவு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com