Headlines
Headlinesமுகநூல்

Headlines: டங்ஸ்டன் திட்டம் குறித்தான அறிவிப்பு முதல் நிவாரண வாகனங்கள் பின் ஓடும் பாலஸ்தீனர்கள் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, டங்ஸ்டன் திட்டம் குறித்தான அறிவிப்பு முதல் நிவாரண வாகனங்கள் பின் ஓடும் பாலஸ்தீனர்கள் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
Published on
  • டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது என டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் அரிட்டாபட்டி போராட்டக் குழு சந்தித்த பின் அண்ணாமலை விளக்கம்.

  • டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என மேலூர் ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.

  • கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியத்துக்கு இன்று அடிக்கல். முக்கிய அறிவிப்பையும் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கீழடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கீழடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு 2 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

  • 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது எனவும், மடைமாற்றம் செய்வதே எடப்பாடி பழனிசாமியின் கடமை என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.

  • அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் அதிகாரிகள் கிடுக்கிப் பிடி விசாரணை. 2019 தேர்தல் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் முறையாக பதில் அளித்துள்ளதாகவும் கதிர் ஆனந்த் விளக்கம்.

  • மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் அறிவிப்பு.

  • காசாவில் நிவாரண உதவிகளை பெற அலைமோதிய பாலஸ்தீனியர்கள். பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பின்னால் ஓடும் அவலம்.

காசா
காசா
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி. சிறப்பாக பந்துவீசிய தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு.

  • மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட இயக்குநர் மிஷ்கினுக்கு வலுக்கும் எதிர்ப்பு. ஆங்கில படங்களை பார்த்து காப்பி அடிக்கும் மிஸ்கின் ஒரு போலி அறிவாளி என நடிகர் அருள்தாஸ் காட்டம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com