Headlines | கார் பந்தயத்தில் வெற்றிப்பெற்ற அஜித் குமார் முதல் மார்ச்சில் தொடங்கும் ஐபிஎல் வரை!
உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது. ஒன்றரை மாதம் நடைபெறும் விழாவில் 40 கோடி பேர் குவிவார்கள் என எதிர்பார்ப்பு.
போலியான டோக்கன்களை பயன்படுத்தி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு காவல்துறை எச்சரிக்கை.
நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்குவதில் குளறுபடி என புகார். நியாய விலைக்கடைகளில் விலையில்லா வேட்டி, சேலைகளின் இருப்பு குறைவாக இருப்பதாக தகவல்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜகவும் அறிவிப்பு. அதிமுக, தேமுதிகவும் ஏற்கனவே புறக்கணித்துள்ளதால் இரு முனைப்போட்டி சூழல்.
இந்திய அரசமைப்பை ஏற்றுக்கொள்ளாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என தேசிய கீத விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கண்டனம்.
ஆளுநர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில். சட்டமன்றத்துக்குள் நடைப் பயிற்சி மேற்கொண்டவர்தான் என்றும் விமர்சனம்.
48ஆவது சென்னை புத்தகக் காட்சி நிறைவு. 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை ஆனதாகத் தகவல்.
மேளதாளம் முழங்க பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது திருவாபரண ஊர்வலம். மகர ஜோதி தரிசன நாளான 14 ஆம் தேதி சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்குவதாக பிசிசிஐ அறிவிப்பு. பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சபலென்கா. தனது பிரபலமான டிக்டாக் நடனத்தை ஆடி மகிழ்ச்சி.
துபாய் கார் பந்தயத்தில் 3 ஆவது இடம் பிடித்த நடிகர் அஜித் குமாரின் அணிக்கு குவியும் வாழ்த்துகள். தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க வாழ்த்துவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு.