நிர்மலா சீதாராமன் உரை... கூச்சலிட்ட எதிர்க்கட்சியினர்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்pt

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதன்மீது நடைபெற்ற விவாதத்தில் போராடி பொருளாதாரத்தினை மீட்டுள்ளோம் என்று தெரிவித்தார். மேலும், “ பாஜகவினர் தேசத்தை முதன்மையாக கருதுகிறோம் காங்கிரஸார் குடும்பத்தை முதன்மையாக கருதுகின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி செய்து வைத்த குழப்பங்களை சரி செய்யவே 10 ஆண்டுகளாகிவிட்டன. கடும் சவால்கள், சிக்கல்களுக்கு இடையில் இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டோம். மத்திய அவையில் எனது உரையை கேட்டு பதில் சொல்லத் தயாரா?..

நிலக்கரி, காமன்வெல்த் ஊழல்களால் பெரு நிறுவனங்கள்தான் கோடிகளில் புரண்டன. ஆனால் மக்கள் பாதிப்பட்டனர். ஜார்க்கண்ட், ஒடிசாவில் நிலக்கரி ஏல ஒப்பந்தங்களை ரத்து செய்ததால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மன்மோகன்சிங் ஆட்சியின்போது பொருளாதார கொள்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை.

நிலக்கரி சுரங்க ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. நிலக்கரியை காங்கிரஸ் தலைமையிலான அரசு சாம்பல்போல் வீணாக்கிவிட்டது. காங்கிரஸ் சாம்பலாக்கிய நிலக்கரியை பாஜக அரசு வைரம்போல பட்டைத்தீட்டியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார். இதனால் எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com