\
விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு :  ஆட்சியர் அறிவிப்பு!

விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு : ஆட்சியர் அறிவிப்பு!

விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு : ஆட்சியர் அறிவிப்பு!
Published on

நேற்று துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரையிரங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழையால் விமானம் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டு விமானம் பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் உள்ளவர்களை மீட்க மத்திய அரசும் மாநில அரசும் முழு வீச்சில் நேற்று இரவிலிருந்து கன மழைச்சூழலில் செயல்பட்டு வருகிறார்கள். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுக்க கேரள இளைஞர்கள் வரிசையில் நின்று மனிதாபிமானத்தை காட்டியுள்ளனர். 

50 க்கும்  மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 லிருந்து 18 ஆக உயர்ந்துள்ளது என்று சற்றுமுன் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com