“400 கோடி ரூபாய் கொடு; இல்லன்னா...” முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

400 கோடி ரூபாய் அளிக்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் எனக்கூறி தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மேலும் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.
Mukesh ambani
Mukesh ambanipt desk

தொழிலதிபர் முகேஷ் அம்பானியை கொலை செய்யப் போவதாகவும் அதை செய்யாமல் இருக்க 20 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் கடந்த வாரம் ஒரு மின்னஞ்சல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து அத்தொகையை 200 கோடி ரூபாயாக அதிகரித்து மீண்டுமொரு முறை மின்னஞ்சல் வந்த நிலையில், தற்போது 400 கோடி ரூபாய் கோரி மூன்றாவதாக இன்னுமொரு மின்னஞ்சல் வந்துள்ளது.

e mail threat
e mail threatpt desk

கொலை மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை அறிய மும்பை காவல்துறை தீவிரம்காட்டி வருகிறது. ஷதாப்கான் அட்மெய்ல் ஃபென்ஸ் டாட் காம் என்ற முகவரியில் இருந்து மின்னஞ்சல் வந்துள்ள நிலையில், அது குறித்த விவரங்களை இன்டர்போல் வாயிலாக பெல்ஜியம் நாட்டில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருந்து மும்பை காவல்துறை கோரியுள்ளது.

மின்னஞ்சல் விடுத்த நபர் வேறு ஏதோ ஒரு நாட்டிலிருந்தவாறு பெல்ஜியம் VPN வசதிகளை பயன்படுத்தி மிரட்டல் விடுத்து வருவதாக மும்பை காவல்துறை சந்தேகிக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com