\
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கு‌ற்ற‌வாளிக்கு மரண தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கு‌ற்ற‌வாளிக்கு மரண தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கு‌ற்ற‌வாளிக்கு மரண தண்டனை
Published on

ராஜஸ்தானில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ரேவாலி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தார்.

இதுகுறித்து பெஹ்ரார் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர். அவர் மீது 302 (கொலை), 363 (ஆள் கடத்தல்), 376 (பாலியல் வன்கொடுமை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

ஆல்வாரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி அஜய் குமார் சர்மா இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக ராஜ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இது அரிதினும் அரிதான வழக்கு என்பதால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என சிறப்பு வழக்கறிஞர் வினோத் குமார் சர்மா தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com