ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு
Published on

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்தது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே விபத்தில் சிக்கி 4 பேர் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் முதலில் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் கொண்டுசெல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். அதுதவிர மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலத்த தீக்காயமடைந்த மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com