காவி நிறமாக மாறிய டிடி சேனலின் லோகோ! கிளம்பிய சர்ச்சை.. வலுக்கும் கண்டனங்கள்!

மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனம்தான் பிரசார் பாரதி தனது இந்தி செய்தி சேனலான டிடி( தூர்தஷன் ) சேனலின் நீல நிற லோகோவை காவி நிறமாக மாற்றம் செய்யதுள்ளது பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.
காவி நிறமாக மாறிய டிடி லோகோ
காவி நிறமாக மாறிய டிடி லோகோமுகநூல்

தேசிய ஊடகமான தூர்தர்ஷன் சேனலின் நீலநிற லோகோ தற்போது காவி நிறமாக மாறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனம்தான் பிரசார் பாரதி. இதன் இந்தி செய்தி சேனலான டிடி( தூர்தர்ஷன் ) சேனலின் நீல நிற லோகோவானது சமீபத்தில், காவி நிறமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம், தேர்தல் பரபரப்பாக நடைப்பெற்று வரும் சூழலில், ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் முக்கிய நிறமாகக் கருதப்படும் காவிநிறமாக செய்தி நிறுவனத்தின் லோகோ மாறியுள்ளது தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கேள்வி
முதல்வர் ஸ்டாலின் கேள்விமுகநூல்

அதில், "உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;

வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;

தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!

தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், இது குறித்து தெரிவிக்கையில், ”பிரசார் பாரதி தற்போது பிரசார பிரதியாக மாற்றப்பட்டிருக்கிறது. லோகோ மட்டுமல்ல டிடி சேனல் முழுவதுமே காவிமயமாகியிருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இது குறித்து தனது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

அதில், “நாடு முழுவதும் தேர்தல் நடைப்பெற்று வரும் நிலையில் தூர்தர்ஷன் லோகோ காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது முற்றிலும் சட்டவிரோதமானது. இது தேசிய ஊடகம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என தெளிவாகத் தெரிகிறது.

இதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது?.... ஆகவே, உடனடியாக லோகோவை மீண்டும் நீல நிறத்திற்கே மாற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com