\
திரிபுரா முதலமைச்சரின் உரையை ஒளிபரப்ப தூர்தர்ஷன் மறுப்பு

திரிபுரா முதலமைச்சரின் உரையை ஒளிபரப்ப தூர்தர்ஷன் மறுப்பு

திரிபுரா முதலமைச்சரின் உரையை ஒளிபரப்ப தூர்தர்ஷன் மறுப்பு
Published on

திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்காரின் சுதந்திர தின உரையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தூர்தர்ஷன் ஒளிபரப்ப மறுத்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை மத்திய அரசு நிர்வகிக்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவை ஒளிபரப்ப மறுத்தன. இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது. இதுதான் பிரதமர் மோடி பேசும் கூட்டாட்சி நடைமுறையா என கேள்வி எழுப்பியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சை நேரடியாக ஒளிபரப்பும் தூர்தர்ஷன், மக்கள் பிரதிநிதியின் உரையை ஒளிபரப்ப மறுப்பது ஏற்புடையதல்ல என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com