\
பணம் பறித்த புகாரில் தாவூத் இப்ராஹிமின் தம்பி கைது

பணம் பறித்த புகாரில் தாவூத் இப்ராஹிமின் தம்பி கைது

பணம் பறித்த புகாரில் தாவூத் இப்ராஹிமின் தம்பி கைது
Published on: 

பணம் கேட்டு மிரட்டியது தொடர்பான புகாரில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தம்பி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இக்பால் கஸ்கர் மீது, கட்டுமான அதிபர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அவரை கைது செய்து மகாராஷ்டிர மாநில தானே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் உலக தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com