\
தாவூத் இப்ராஹிம் ஹபீஸ் சயத் ஆகியோர் பயங்கரவாதிகள் - மத்திய அரசு அறிவிப்பு

தாவூத் இப்ராஹிம் ஹபீஸ் சயத் ஆகியோர் பயங்கரவாதிகள் - மத்திய அரசு அறிவிப்பு

தாவூத் இப்ராஹிம் ஹபீஸ் சயத் ஆகியோர் பயங்கரவாதிகள் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட 4 பேரை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஐ.ஏ அமைப்பிற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த
திருத்தத்தின் அடிப்படையில், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) தற்போது தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சயத்
உள்ளிட்ட 4 பேரை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்திருக்கிறது.  இவர்கள் இருவரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில்
தொடர்புடையவர்கள். 

இதுதவிர நாடாளுமன்றம், ஜம்மு-காஷ்மீர் பேரவை, பதான்கோட் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்திய மசூத் அசாரும் பயங்கரவாதியாக
அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், 2000ல் டெல்லி செங்கோட்டை தாக்குல், 2008 ராம்பூர் மற்றும் மும்பை தாக்குதலில் தொடர்புடைய
ஸகி உர் ரகுமான் லக்வி-யும் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com