ஆதாருக்கு 13 அடி அடர்த்தியான சுவர் பாதுகாப்பு !!

ஆதாருக்கு 13 அடி அடர்த்தியான சுவர் பாதுகாப்பு !!

ஆதாருக்கு 13 அடி அடர்த்தியான சுவர் பாதுகாப்பு !!
Published on

ஆதார் தொடர்பான வழக்கின் விசாரணை நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆதார் எண்ணை விரும்பினால் இணைத்துக் கொள்ளலாம் என கூறியதால் 2016க்கு முன்பு வரை மக்கள் அனைத்துக்கும் ஆதார் தகவல்களை கொடுத்தனர் , ஆனால் இப்போது எதிர்க்கின்றனர், ஆதார் தொடர்பான தகவல்களை யார் வேண்டுமானாலும் எளிதில் திருட முடியும் என கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் அப்படி இல்லை. ஆதார் தகவல்களை சேமித்து வைத்துள்ள இடத்தின் சுவர் 13 அடி அடர்த்தி கொண்டது என்றார்

மேலும், ஆதார் தகவல்களை சமூக நலத்திட்டங்களுக்கு இணைத்ததால், மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது, உரியவர்களுக்கு பணம் சென்று சேரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். பணக்காரர் , ஏழை என்ற வித்தியாசத்தை சரி செய்ய ஆதார் தேவைப்படுகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சிக்ரி, ஓய்வுக்கு பின் ஓய்வூதியம் பெறும் நபரை அன்றி வேறு யார் அவரது பணத்தை பெற முடியும் என வினவ, நீங்கள் இறந்து விட்டால், உங்கள் ஓய்வூதியத்தை யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்ற நிலையே ஆதாரை இணைக்காவிட்டால் ஏற்படும் என்றார். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com