மைசூரு தசரா: போலீஸ் பாதுகாப்புடன் யானைகளுக்கு நடைபயிற்சி
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க முதல்கட்டமாக வந்துள்ள அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கு நடைபயிற்சி தொடங்கப்பட்டது.
மைசூரு தசரா விழா அடுத்த மாதம் 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. ஜம்புசவாரி ஊர்வலம் 30-ம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை உட்பட 8 யானைகள் முதல்கட்டமாக மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
அந்த யானைகள் அனைத்திற்கும் எடை அளவு சரிபார்க்கப்பட்டன. பின்னர் அவற்றிற்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது 8 யானைகளுக்கும் ஜம்புசவாரி ஊர்வலம் நடைபெறும் வழியான அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டப தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை நடைபயிற்சி நேற்று முதல் தொடங்கப்பட்டது.
தினமும் காலையில் ஒருமுறையும், மாலையில் ஒருமுறையும் இந்த நடைபயிற்சி போலீஸ் பாதுகாப்புடன் அளிக்கப்பட உள்ளது.