பெண்மணியின் பாடலுக்கு ’துள்ளி துள்ளி’ டான்ஸ் ஆடும் எருமை மாடு - வைரல் வீடியோ

பெண்மணியின் பாடலுக்கு ’துள்ளி துள்ளி’ டான்ஸ் ஆடும் எருமை மாடு - வைரல் வீடியோ

பெண்மணியின் பாடலுக்கு ’துள்ளி துள்ளி’ டான்ஸ் ஆடும் எருமை மாடு - வைரல் வீடியோ
Published on

பெண்மணி ஒருவர் பாடப் பாட எருமை மாடு அவருடன் துள்ளிக்குதித்து ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

எருமை மாடு என்றாலே நம் நினைவுக்கு வருவது எப்போதும் படுத்துக்கொண்டே இருக்கும் என்பதுதான். மழை பெய்தால்கூட மழைதான் பெய்து உடம்பின் மீது பட்டு விலகிச்செல்லுமே தவிர எருமை மாடு எழுந்து விலகிச்செல்லாது. அதனால்தான், படுத்துக்கொண்டே இருப்பவர்களை ’எருமை மாதிரி படுத்திருக்கு பாரு’ என்பார்கள்.  ‘பொறுமை எருமையிலும் பெரியதாம்’ என்று நம்மூரில் வழக்குச்சொல்லே இருக்கிறது. அப்படியொரு பொறுமையின் அடையாளமான எருமை மாடு துள்ளலுடன் டான்ஸ் ஆடி குத்தாட்டம் போட்டால் எப்படி இருக்கும்? ஆச்சர்யத்தில் நம் மனமும்தான் குதூகலத்தில் குத்தாட்டம் போடும். அப்படியொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி மனதை உற்சாகப்படுத்துகிறது.

அந்த வீடியோவில் பெண்மணி ஒருவர் மகிழ்ச்சியுடன் பாடலைப்பாடி ஆட எருமை மாடும் குதித்து டான்ஸ் ஆடுகிறது. உடம்பை ஆட்டி குதிக்கிறது. அங்கிருக்கும் குழந்தை இதனைப் பார்த்து வாய்விட்டு மகிழ்ச்சியில் சிரிக்கிறது. அதோடு, எருமை மாடு போட்ட ஆட்டத்தில் அதன் மேலிருந்த துணியே விழுகிறது. இந்த வீடியோவை பலரும் உற்சாகமுடன் பகிர்ந்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com